உதவிகளை வழங்குவோர்

எமது பகிரப்பட்ட இலக்கை  வதற்கு தமது பங்களிப்பு ஆதரவளிக்கும் எம் சகல பங்காளர்களுக்கும் Teach First ஸ்ரீ லங்கா நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.

Child Action லங்கா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஒரு வருட கால அங்கத்துவ நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதற்காக Teach First ஸ்ரீ லங்கா, Child Action லங்கா உடன் கைகோர்த்துள்ளது. பின்தங்கிய சமூகத்தாருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து ஆதரவளிக்கும் வகையில் மட்டக்களப்பில் நிலையமொன்றை Child Action லங்கா கொண்டுள்ளது. இவற்றில், 650 வாராந்த பங்கேற்பாளர்களுடன் பாடசாலைக்கு பின்னரான நிகழ்ச்சித் திட்டமும் அடங்கியுள்ளது.பின்தங்கிய வாழ்வியல் நிலையில் இருக்கும் குழந்தைகளை ஊக்கப்படுத்தி, அவர்களின் அடிப்படைத் தேவைகள், உரிமைகள் மற்றும் ஈடுபாடுகளை மேம்படுத்துவதற்கு வலுவூட்டுவது அவர்களின் தன்னேற்புத்திட்டமாக அமைந்துள்ளது.

Education Forum ஸ்ரீ லங்கா

EFSL என்பது சுயாதீன ஊடக கட்டமைப்பாக திகழ்வதுடன், TFSL உடன் இணைந்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் பங்காளர்களுடன் ஈடுபாடுகளை பேணி, கல்விசார் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் பணிகளை மேற்கொள்கின்றது. வெபினார்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளினூடாக, உள்நாட்டு பாடசாலை பங்காளர்களைக் கொண்ட ஒன்லைன் சமூகமொன்றை நாம் உருவாக்குவதுடன், அதனூடாக கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகளை இனங்காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகம்

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளதுடன், இலங்கையில் காணப்படும் 15 அரச பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. சுமார் 7500 மாணவர்களைக் கொண்டுள்ளதுடன், இந்த பல்கலைக்கழகத்தினால் பல்வேறு பாடப் பிரிவுகளில் பட்டப் படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பு கற்கைகள் வழங்கப்படுகின்றன. கலை, முகாமைத்துவம், விஞ்ஞானம், விவசாயம், சுகாதார விஞ்ஞானங்கள், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்துடன் TFSL இணைந்து, அருகாமையில் காணப்படும் ஐந்து பாடசாலைச் சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் பட்டம் பயிலும் மாணவர்களையும் வலையமைப்பைச் சேர்ந்த இதர அமைப்புகளின் அங்கத்தவர்களையும் இணைத்து செயலாற்றுகின்றது.

Helping Wings

ஓட்டமாவடி மத்தியைச் சேர்ந்த சிறந்த சாதனைகளை பதிவு செய்திருந்த மூன்று மாணவர்களால் Helping Wings ஸ்தாபிக்கப்பட்டது. அருகாமையில் இருந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஒரு சிறுமிக்கு உதவியதிலிருந்து இவர்களின் பயணம் தொடங்கியது. அந்த சிறுமியின் பாட்டி ஒரு சிறுதொழில் தொடங்குவதற்காக இந்த மூன்று மாணவர்களும் பொதுமக்களிடம் பணம் திரட்டிக் கொடுத்துள்ளனர். இன்று, சமூக-அடிப்படையில் இயங்கும் இந்த அமைப்பினால், உள்நாட்டு வியாபாரங்களுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகள், பயிற்சிப் பட்டறைகள் முன்னெடுப்பது மற்றும் பல்வேறு செயற்பாடுகளுக்கு நிதி திரட்டுவது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. Sri Lanka Unites மற்றும் IREX போன்ற கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அமைப்புகளின் ஆதரவை இவர்களின் அர்ப்பணிப்பு ஈர்த்திருந்தது. Helping Wings இனால், TFSL க்கு, களத் தகவல் திரட்டல் மற்றும் பல்லூடக ஆதரவு போன்ற ஆதரவுகள் வழங்கப்படுகின்றன.

AIESEC ஸ்ரீ லங்கா

AIESEC ஸ்ரீ லங்கா என்பது இளைஞர்களால் தலைமைத்துவமளிக்கப்படும் அமைப்பாக அமைந்திருப்பதுடன், நிபுணத்துவ விருத்தி மற்றும் கலாசார பகிர்வு நிகழ்ச்சிகளினூடாக இளைஞர்கள் மத்தியில் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளது. மாணவர்கள் மற்றும் அண்மையில் உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களால் இயக்கப்படும் பக்கசார்பற்ற, இலாப நோக்கற்ற நிறுவனம் எனும் வகையில் AIESEC ஸ்ரீ லங்காவினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இளம் வயதினர் பயனடைந்துள்ளனர். பன்முகத்தன்மை, கைகோர்ப்பு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் பரந்த பின்புலன்களைச் சேர்ந்த இளம் வயதினரிடையே புரிந்துணர்வை மேம்படுத்துவது, சமூகத்தில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துவது அவர்களின் தன்னேற்புத்திட்டமாக அமைந்துள்ளது. அவர்களின் "Global Classroom" திட்டத்தின் அங்கமாக, AIESEC ஸ்ரீ லங்காவினால், Teach First SL க்கு, மாதிரித் திட்டமொன்றுக்கு ஆதரவளிப்பதற்கு சர்வதேச தன்னார்வ செயற்பாட்டாளர்கள் வழங்கப்படும்.

நீங்கள் TFSL உடன்
கூட்டு சேர விரும்புகிறீர்களா?