நமது குழந்தைகளின் கல்விக்கு நம் அனைவரின் பங்களிப்பும் அவசியமாகிறது

0 %

ஏழை கிராமப்புறக் குழந்தைகள் பள்ளி படிப்பை முடிப்பதில்லை

0 K

மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளைவிட்டு வெளியேறுகிறார்கள் 

0 %
ஆசிரியர்கள் பட்டதாரி
பட்டம் பெற்றவர்கள்
0 %

மாணவர்கள் வரையறுக்கப்பட்டவர்கள் அல்லது பாடங்களுக்கு அணுகல் இல்லாதவர்கள்

TEACH FIRST ஸ்ரீ லங்கா என்பது, இலங்கையின் பாடசாலைகளில் காணப்படும் நெருக்கடிகளுக்கான காரணிகளை சீர் செய்வதை இலக்காகக் கொண்டு செயல்படும் சமூக அமைப்பாகும்

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் தலைமைப் பண்புகளை மேம்படுத்துவதும் , உலகத்திலுள்ள எல்லா குழந்தைகளுக்கும், எவ்வித பாகுபாடுமின்றி, தங்கள் ஆற்றலை பெருக்கிக்கொள்ள சிறந்த கல்வியை வழங்குவதும் எங்கள் தலையாய பணியாகும்.

எமது சமூகத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய சிறுவர்களை கல்விக் கட்டமைப்பு மேலும் பின்னடையச் செய்கின்றது என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளதுடன், இந்த சிறுவர்களுக்கு தமது இலக்குகளை அடைவதற்கும், நீண்ட கால அடிப்படையிலான வெற்றிக்கு அவசியமான திறன்களை கட்டியெழுப்பிக் கொள்வதற்கான பிரத்தியேகமான ஆதரவையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம். எமது முயற்சிகளினூடாக, அவர்களுக்கு அவசியமான மாற்றமாக எம்மால் திகழ முடியும்.  கல்விப்பாதையை மாற்றியமைக்கும் பயணத்தில், எம்முடன் இணைந்திடுங்கள்.

ஒரு ஆசிரியரின் குறிப்பு

கனம் நண்பர்களே,

Teach First Sri Lanka இணையத்தளத்துக்கு விஜயம் செய்தமைக்கும், சிறுவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான எங்களது அர்ப்பணிப்பை பகிர்ந்து கொள்கின்றமைக்கும் நன்றி.

நாம் ஒன்றிணைந்து, கைகோர்த்து, நீண்ட கால அடிப்படையில், நமது  கல்விக் கட்டமைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் தவறான வழிமுறைகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் கவனம் செலுத்துவதனூடாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

Teach First ஸ்ரீ லங்காவின் நோக்கத்தை செயல்படுத்த உங்களின் ஆதரவு எமக்கு அவசியமாகின்றது

இலங்கையில் பிறந்த நாங்கள் அறிவுக்கான தேடலுடன் உலகம் முழுவதும் பயணிக்கிறோம்

இலங்கையில் குறைந்த வளங்களைக் கொண்ட பாடசாலைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் சிறந்த செயன்முறைகளை பின்பற்றுவதாக எமது வழிமுறைகள் அமைந்துள்ளன. உள்நாட்டு பெற்றோர், கல்வி கற்பிப்போர் மற்றும் பாடசாலை நிர்வாக தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதனூடாக, நவீன, பரிபூரண கல்வி வழிமுறைகளை ஆயிரக் கணக்கான சிறுவர்களின் வாழ்வில் – வகுப்பறையினுள்ளும், வெளியேயும் ஏற்படுத்த முயல்கிறோம்.

ஒரு வழிகாட்டியாக மாணவரின் வாழ்வை மாற்றுங்கள்
ஒரு ஆசிரியராக மாணவரின் வாழ்வை மாற்றுங்கள்

எங்கள் பங்காளிகள்

மக்கள் மக்களுக்கு உதவும்போது,
​​மாற்றம் நிகழும்

இலங்கையின் குழந்தைகளுக்கு அவர்களுக்குத் தேவையான கல்வியை வழங்குவதற்கு நீங்கள் எங்களுக்கு உதவக்கூடிய பல வழிகள் உள்ளன.

 

நீங்கள் உங்கள் நேரத்தையும் அறிவையும் நன்கொடையாக வழங்கலாம், குழந்தையின் கல்வி அல்லது TFSL திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கலாம் அல்லது உங்கள் ஆதரவையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்ள உங்கள் நிறுவனத்தை TFSL உடன் கூட்டாளியாக்கலாம்.

எங்கள் திட்டங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள TFSLஐ தொடர்புகொள்ளுங்கள்.

நன்கொடை
வழங்கல்

தன்னார்வ
செயற்பாட்டாளர்கள்

எம்முடன்
பணியாற்றுங்கள்