ஏன் நாம் உதவுகின்றோம்

இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான சிறுவர்கள், தமது வாழ்க்கையில் வெற்றிகரமாக இயங்குவதற்கு அவசியமான போதியளவு கல்வி வாய்ப்புகளை கொண்டிருப்பதில்லை. இந்த நெருக்கடிக்குக் காரணமான நாட்டின் கல்விக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண Teach First ஸ்ரீ லங்கா முயற்சிக்கின்றது

இலங்கையின் எதிர்கால வெற்றிகரமான செயற்பாட்டுக்கு கல்வி என்பது முக்கியமான அங்கமாக அமைந்திருந்த போதிலும், மொத்த தேசிய உற்பத்தியில் 2% ஒதுக்கீட்டை மாத்திரமே கொண்டுள்ளது. ஏனைய மத்திய வருமானமீட்டும் நாடுகள் தமது மொத்த தேசிய உற்பத்தியில் 4% ஐ கல்விக்காக ஒதுக்கீடு செய்கின்றன. வறுமை, பட்டினி மற்றும் பொருளாதார பாகுபாடுகள் போன்ற சவால்களை கல்விக் கட்டமைப்பு எதிர்கொள்கின்றது.

சமூகத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய சிறுவர்கள், முன்னேறுவதற்கான பல்வேறு வாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர். கொரோனா தொற்றுநோய், சிறுவர்கள் மத்தியில் அத்தியாவசியமான விருத்தி வருட காலப்பகுதியை இல்லாமல் செய்து, மேலும் பின்னடைவை தோற்றுவித்திருந்தது. இதனால், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் திறன் படைத்த நிபுணர்களாக திகழ வேண்டியவர்கள் மத்தியில் அறிவு இழப்புக்கு வித்திட்டுள்ளது

இந்த நிலை, நம் நாட்டின் அறிவாற்றலையும், புதியனவற்றைத் தேடி அறியும் ஆர்வத்தையும் பாதித்து இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை அமைத்துத் தர தடையாக இருக்கிறது. மேலும் இப்போது நிலவும் சமூக-பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளமுடியாதபடி செய்கிறது.

நமது சிறுவர்களுக்காக நாம் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாற்றத்திற்கான ஆசை செயலுடன்
இணைந்தால் மாற்றம் சாத்தியமாகும்