எமது மக்கள்

நாம் பரந்த பின்புலன்களைச் சேர்ந்த பல்வேறு திறன்களைக் கொண்ட, அனுபவம் வாய்ந்த கல்வி கற்பிப்போர், மாற்றத்தை ஏற்படுத்துவோர் மற்றும் கொள்கை அமைப்பாளராக திகழ்கின்றோம். எதிர்பார்க்கப்படும் மாற்றத்துக்கு செயற்பாடுகளினூடாக வலுச் சேர்க்கப்படுவதனூடாக மாற்றத்தை எய்தக்கூடியதாக இருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
இலங்கையின் சகல சிறுவர்களுக்கும் இலவச, உயர் தரம் வாய்ந்த கல்வியை அணுகுவதற்கு சமத்துவமான வாய்ப்பை வழங்குவது எமது பொதுவான இலக்காகும்.

zv2kXzAA
டேவிட்
பொஹ்ம்
Founding Director
DSC_7883
லிலனி
முனசிங்க
Founding Director
PofBW08A
ஜெரமி டி
சில்வா
Chief Program Officer
DSC_7904
சரித்
அபேரட்ன
Director
DSC_7934 (1)
முனைவர் நிர்மல் டி சில்வா
Director
SJS
ஷெரங்கி ஜே செனவிரத்ன
Director
DSC_7981 (1)
டெப்
எதிரிசிங்க
Director
DSC_8100 (1)
முனைவர் தாரா டி மெல்
Director

மக்கள் மக்களுக்கு உதவும்போது,
​​மாற்றம் நிகழும்

DSC_8082 (1)

டேவிட் பொஹ்ம்

Founding Director

டேவிட் பொஹ்ம், அனுபவம் வாய்ந்த கல்வி கற்பிப்பவர். தரமான கல்விக்கான வழக்குரைஞராகவும், நிலைபேறுடைய நன்னம்பிக்கையாளராக திகழ்பவர். மூலதன சந்தைகள் மற்றும் வங்கியியல் துறையில் தாம் வகித்த வெற்றிகரமான நிலையிலிருந்து வெளியேறி, கற்பிப்பதில் தாம் கொண்டுள்ள அதீத ஈடுபாட்டுக்கமைய, நியு யோர்க் சிட்டி உயர் பாடசாலையில் கணித பாடம் கற்பிக்க ஆரம்பித்தார். எவ்வாறாயினும், இலங்கையில் இவர் கற்பித்தலில் ஈடுபட்டிருந்த போது, நாட்டின் கல்விக் கட்டமைப்பில் மேம்படுத்தலை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதை இவர் உணர்ந்தார். இந்த சவாலை சீர் செய்யும் நோக்குடன், Teach First ஸ்ரீ லங்காவை இவர் இணைந்து நிறுவியிருந்தார். ஒவ்வொரு சிறுவரினதும் அடிப்படை உரிமையாக கல்வி அமைந்துள்ளது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எமது எதிர்கால தலைவர்களில் முதலீடு செய்வது என்பது, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது எனவும் கருதுகின்றார். இவரது கற்பித்தல் அனுபவத்துக்கு மேலதிகமாக, நிதியியல், தொழில்நுட்பம் மற்றும் தந்திரோபாய ஆலோசனை வழங்கல் ஆகியவற்றில் சிரேஷ்ட தலைமைத்துவ பதவிகளை டேவிட் வகித்துள்ளார். இவர் தற்போது, கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் பாடசாலையில் தொழில்நுட்ப பணிப்பாளராக சேவையாற்றுகின்றார்.

DSC_7896 (1)

லிலனி முனசிங்க

Founding Director

லிலனி முனசிங்க அதிகளவு அனுபவம் வாய்ந்த கற்பிப்பவர், ஆலோசனை வழங்குநர் மற்றும் சான்றளிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக திகழ்வதுடன், இரு பிள்ளைகளின் தாயாராகவும் திகழ்கின்றார். இலங்கையில் வகுப்பறைகளில் இரு தசாப்த காலத்துக்கு அதிகமான அனுபவத்தைக் கொண்டுள்ள லிலனி, சிறுவர்களுடன் தொடர்பாடல்களை பேணுவதில் அக்கறையுடனான மற்றும் ஆய்வு அடிப்படையிலான வழிமுறைகளைப் பேணுகின்றமைக்காக புகழ்பெற்றுள்ளார். இலங்கையின் கல்விக் கட்டமைப்பில் காணப்படும் சவால்களுக்கு மத்தியில், லிலனி நன்னம்பிக்கை கொண்டவராக திகழ்வதுடன், அனைவருக்கும் சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார். இவர் தமது தொழில் வாழ்க்கையை கொழும்பில் விசேட தேவைகள் (SEN) மற்றும் முன்-பள்ளி கல்வியில் ஆரம்பித்ததுடன், பரந்தளவு கற்பித்தல் நிலைகளில் நடுத்தரளவு மற்றும் உயர் பாடசாலைகளில் கற்பிக்கும் நிலைகளுக்கு முன்னேறியிருந்தார். இவரின் பரந்த அனுபவத்துக்கு மேலதிகமாக, சிறுவர் உளவியலில் லிலனி பின்புலத்தைக் கொண்டுள்ளதுடன், தமது கற்பித்தல் செயற்பாடுகளை இதனை பின்பற்றுவதுடன், மாணவர்களின் உளவியல் தேவைகள் பூர்த்தி செய்வதை உறுதி செய்கின்றார். கொழும்பு பிரிட்டிஷ் பாடசாலையில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு முன்னதாக, கல்கிசை பரி. தோமாவின் கல்லூரியில் இவர் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

DSC_8000

ஜெரமி டி சில்வா

Chief Program Officer

வங்கியியல் துறையிலிருந்து கல்விக்கான தமது ஈடுபாட்டை தொடர்வதற்காக மாறியிருந்த அனுபவம் வாய்ந்த நிபுணராக ஜெரமி டி சில்வா திகழ்கின்றார். Next Campus இல் இவர், நிகழ்ச்சி முன்னெடுப்பது தொடர்பான பெறுமதி வாய்ந்த அனுபவத்தை இவர் பெற்றுக் கொண்டார். உள்நாட்டு மற்றும் சர்வதேச கல்விக்கிடையே பெருமளவு இடைவெளி காண்பதை இனங்கண்டிருந்தார். இதன் காரணமாக, இவர் Teach First ஸ்ரீ லங்காவில் கற்பிப்பதற்கு முன்வந்திருந்தார். அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் மூலோபாய வழிகாட்டல்களில் இவர் முக்கிய பங்காற்றுகின்றார். மேலும், இவர் Hype ஸ்ரீ லங்காவுடன் தன்னார்வ செயற்பாட்டாளராக இணைந்துள்ளதுடன், PeaceX அங்கத்துவ நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளார். பேர்மிங்ஹம் சிட்டி பல்கலைக்கழகத்தின் செயற்திட்ட முகாமைத்துவத்தில் மாஸ்டர்ஸ் பட்டத்தை கொண்டுள்ளதுடன், கல்வி விருத்தியில் தொடர்ச்சியான பயிலல்களை தொடர தம்மை அர்ப்பணித்துள்ளார்.

DSC_7914

சரித் அபேரட்ன

Director

சிறுவர்களுக்கு பயில்வதற்கு உதவிகளை வழங்குவதில் உறுதியான ஈடுபாட்டைக் கொண்ட நேர்த்தியான செயற்பாட்டாளராக சரித் அபேரட்ன திகழ்கின்றார். Teach First UK இல் இவர் பயின்றுள்ளதுடன், சமூகத்தின் மிகவும் பின்தங்கிய சிறுவர்கள் மத்தியில் வகுப்பறையின் உள்ளேயும், வெளியேயும் முறையாக பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் கரிசனையுடைய ஆசிரியர்கள் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை கொண்டிருப்பார்கள் என்பதை இவர் பயின்றிருந்தார். ஆரம்பத்தில் சரித் சட்டத் துறையில் தமது அனுபவத்தைக் கொண்டிருந்த போதிலும், தமது உண்மையான ஈடுபாட்டை இனங்காண்பதற்கு இந்த அங்கத்துவ திட்டம் உதவியிருந்தது. இவர் அதீத ஈடுபாடுடைய ஆசிரியராக திகழ்வதுடன், இந்த மாதிரித் திட்டம் எவ்வாறு இயங்குகின்றது என்பதை அவதானித்துள்ளதுடன் அதில் முழுமையான நம்பிக்கையையும் கொண்டுள்ளார். ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர் ஆகியோரிடையே காணப்படும் உறவுகளில் அதிகளவு அக்கறை கொண்டவராக சரித் திகழ்வதுடன், இந்த உறவுகள் சுமூகமாக காணப்படும் நிலையில், சிறுவரின் ஒட்டுமொத்த நலனுக்கு அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கின்றன என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார். கற்பித்தலுக்கு அப்பால், லண்டன் Deloitte இல் Artificial Intelligence மற்றும் Data Consultant ஆக சரித் திகழ்கின்றார்.

DSC_7942 (1)

முனைவர் நிர்மல் டி சில்வா

Director

கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பெறுமதி ஆகியவற்றை கண்டறிவதில் தமது பெருமளவான தொழில் காலப்பகுதியை அர்ப்பணித்துள்ள தூர நோக்குடைய தலைவராக முனைவர் நிர்மல் டி சில்வா திகழ்கின்றார். இலங்கை சர்வதேச தொழில்முயற்சியாண்மை வலையமைப்பில் இவர் கொண்டுள்ள நிலையினூடாக, சரியான மனநிலையை தோற்றுவிக்க அவசியமான பரிபூரண பயிலலில் கவனம் செலுத்தும் பாடவிதானத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். முனைவர் டி சில்வா, வாழ்க்கையின் சகல பிரிவுகளையும் சேர்ந்த சகல நபர்களுக்கும் எழுச்சியூட்டுவதில் தம்மை பெருமளவு அர்ப்பணித்துள்ளதுடன், அதனூடாக மாற்றத்துக்கான செயற்பாட்டாளர்களாக திகழவும், சமூகத்தின் நலனை மேம்படுத்துவதில் பங்களிப்பு செய்யக்கூடியவர்களாகவும் மாற்றுவதில் பங்களிப்பு செய்துள்ளார். விருது வென்ற தந்திரோபாய ஆலோசகர், SME வழக்குறைஞர், தாக்கத்தை ஏற்படுத்தும் முதலீட்டாளர் மற்றும் இணை பேராசிரியராக 20 வருடங்களுக்கு மேலாக உயர் தலைமைத்துவ பதவிகளை வகித்துள்ளார். இதில் ஃபோர்ச்சூன் 500 நிறுவனங்களும் அடங்குகின்றன. இவர் பல பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர் சபையிலும் அங்கம் வகிக்கின்றார்.

SJS_1

ஷெராங்கி ஜே. செனவிரத்ன

Director

ஷெராங்கி ஒரு திறமையான அனுபவம் வாய்ந்த ஒருவர் & தகவல் தொடர்பாடல் மூலோபாய நிபுணர், உறுதியான வழக்கறிஞர் மற்றும் அர்ப்பணிப்புள்ள வழிகாட்டி ஆவார். ஏறக்குறைய இரண்டு தசாப்த கால வாழ்க்கை முழுவதும், தரமான தகவல்தொடர்புகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பார்வையாளர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்க்கும் உத்திகளை வடிவமைப்பதில் அவர் அறியப்படுகிறார். சமூகத்தை நன்கு புரிந்துகொள்வதற்கான அவரது ஆர்வம் மற்றும் நாம் அனைவரும் எங்கிருந்தாலும், எப்பிடியிருந்தாலும் இந்த உலகிற்கு இன்னும் எவ்வாறு நல்லது செய்ய முடியும் மற்றும் பங்களிக்க முடியும், என்பதை செயன்முறைபடுத்துகிறார்.  நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான இந்த அர்ப்பணிப்பு அவரது தொழில்முறை முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது. ஏனெனில் அவர் பொறுப்பான மற்றும் சிறந்த நடைமுறைகளில் உள்ளார்ந்த குழுக்களுக்குத் தீவிரமாகக் கல்வி கற்பித்து வழிகாட்டுகிறார். தலைமைத்துவம் மற்றும் மாற்ற மேலாண்மைக்கான முழுமையான அணுகுமுறையை வலியுறுத்தி, ஷெராங்கி நனவான தலைமை மற்றும் வழிமுறைகளை வென்றெடுத்தார். இது நிலைத்தன்மை மற்றும் சமூக ஈடுபாட்டிற்கான வழிமுறைகளில்  அவரது அணுகல் மற்றும் சமூக நலனுக்காக வணிகத்தை மேம்படுத்துவதில் அவரது நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மேலும், சிறந்த உலகிற்கான அர்த்தமுள்ள பங்களிப்பை மற்றவர்களுக்கு அளிக்கிறது.

DSC_7971 (1)

டெப் எதிரிசிங்க

Director

சிறுவர் நலன்புரிச் செயற்பாடுகள் மற்றும் சமூக நீதி போன்றவற்றுக்கான அதீத ஈடுபாடுடைய வழக்குரைஞராக டெப் எதிரிசிங்க திகழ்கின்றார். எட்டு உயர் தேவைகள் நிறைந்த பிரதேசங்களின் பின்தங்கிய இலகுவில் பாதிப்புறக்கூடிய சிறுவர்களுக்கு பாதுகாப்பான பகுதிகளை வழங்கும் அமைப்பான Child Action லங்காவை இவர் ஸ்தாபித்திருந்தார். மேலும், Anugra Asia இன் பணிப்பாளராக இவர் திகழ்வதுடன், Epiphany Trust இன் ஆசிய பணிப்பாளராகவும் திகழ்கின்றார். Global Goodwill Ambassadors உடன் நெருக்கமான பணியாற்றும் உறவுகளைப் பேணி வருகின்றார். இவரின் நினைவிலிருக்கும் பணிக்கு, பல்வேறு கௌரவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இவற்றில், வாழ்நாள் சாதனையாளர் விருது (Women World Awards 2019), Zonta Centennial விருது மற்றும் World Zinta விருதுகள் 2019 இல் ஆண்டின் பெண் தொழில் முயற்சியாளர் விருது போன்றன அடங்கியுள்ளன. இவர் தற்போது டேர்ஹம் பல்கலைக்கழகத்தில் PhD பட்டத்தை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC_8103 (1)

முனைவர் தாரா டி மெல்

Director

இலங்கையின் கல்விக் கட்டமைப்பில் நன்மதிப்பைப் பெற்ற நபராக முனைவர் தாரா டி மெல் திகழ்கின்றார். நாட்டின் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இரண்டு தசாப்த காலத்துக்கு மேலாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். தரமான மற்றும் சமத்துவமான கல்விக்கான அதீத ஈடுபாட்டைக் கொண்ட வழக்குரைஞராக இவர் திகழ்வதுடன், சிறுவர் பாதுகாப்பு மற்றும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் சித்திரவதைகளை இல்லாமல் செய்வதிலும் பங்காற்றுகின்றார். கல்வி அமைச்சின் செயலாளராக மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு கல்வி ஆலோசகராக இலங்கை அரசாங்கத்தில் இருபது ஆண்டுகளாக சேவையாற்றிய அனுபவத்தை இவர் கொண்டுள்ளார். சகல சிறுவர்களுக்கும் கல்வியறிவூட்டும் உலகளாவிய ஆணைக்குழுவின் அங்கத்துவ அமைப்பான Education Forum ஸ்ரீ லங்காவின் இணை தலைமை அதிகாரியாக முனைவர் தாரா திகழ்வதுடன், சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கைக்கான UNESCO ஆலோசனை சபையின் அங்கத்தவராகவும் திகழ்கின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆய்வு அடிப்படையிலான MD பட்டத்தைக் கொண்டுள்ளதுடன், லண்டன் பல்கலைக்கழகத்தில் MPhil பட்டத்தையும் கொண்டுள்ளார். ‘Reforming Education: Challenges to Change’ இன் படைப்பாளருமாவார்.