நாம் யார்

TEACH FIRST ஸ்ரீ லங்கா என்பது, இலங்கையின் பாடசாலைகளில் காணப்படும் நெருக்கடிகளுக்கான காரணிகளை சீர் செய்வதை இலக்காகக் கொண்டு செயல்படும் சமூக அமைப்பாகும்.

நாங்கள் கல்வியாளர்கள் மட்டுமின்றி, அனைத்து மாணவர்களுக்கும் சமமான, இலவச, உயர்தர கல்வி கிடைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களாகவும் இருக்கிறோம்

எமது நோக்கம்

எந்த சமூக-பொருளாதார அல்லது புவியியல் அமைவிட பின்புலத்தைக் கொண்ட சகல சிறுவர்களுக்கும், உயர் தரம் வாய்ந்த, உள்ளடக்கமான மற்றும் பரிபூரண கல்வியை பெற்று, தமது முழுத் திறனையும் எய்துவது.

எமது தன்னேற்புத்திட்டம்

திரண்ட தலைமைத்துவத்தினூடாக மாணவர்கள்,
கல்வி கற்பிப்போர் மற்றும் பெற்றோர்களுக்கு
கல்வியை மாற்றியமைப்பதற்கு வலுச் சேர்ப்பது.

மாற்றத்திற்கான ஆசை செயலுடன்
இணைந்தால் மாற்றம் சாத்தியமாகும்

எமது கோட்பாடுகள்

நம்பிக்கையின் வலிமையினூடாக மாற்றம் நிகழ்கிறது.

நம்பிக்கையின் வலிமையானது, மக்களுக்கு முடிவில்லாத வாய்ப்புகளை தோற்றுவித்து, மாற்றத்துக்கு வழிகோலுவதாக அமைந்திருப்பதுடன், அடிப்படை மனித உரிமையாக, உயர் தரம் வாய்ந்த கல்வியை அணுகுவதற்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது என்று நம்புகிறோம்.  எமது நிறுவனத்தின் உயர் நிலைகளிலிருந்து தொடங்கி, எமது பாடசாலைகளில் சகல சமூக பங்காளர்களுடனும் எவ்வாறு நாம் தொடர்புகளை பேணுகின்றோம் என்பது வரை எங்கள் பயணம் நம்பிக்கையோடு தொடர்கின்றது.

ஒன்றிணைந்த தலைமைத்துவத்தினூடாக மாற்றம் என்பது சாத்தியமாகிறது

இந்த முயற்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கட்டமைப்பு ரீதியான மாற்றம் ஏற்படும். எதிர்காலத்தின் சவால்கள் நம் அனைவரையும் பாதிக்குமாயின் அவற்றின் விடைகளைத் தேடி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது அவசியமாகிறது. டீச் பார் ஸ்ரீ லங்கா (TFSL) எல்லா நிலைகளிலும் பன்முகத்தன்மையை பேணிக்காக்கிறது.

மாற்றம் ஒன்றே
மாறாதது

கற்றல் என்பது முடிவற்றது – அதுவே எமது தாரக மந்திரம்! கற்றலும் கற்பித்தலும் எங்கள் அனுபவத்தின் மையமாக  திகழ்கின்றன. வகுப்பறை அறிவுறுத்தல், பாடவிதான வடிவமைப்பு, நிபுணத்துவ விருத்தி மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை  உலகத்தரமான வளர்ச்சியடையச் செய்து, எமது வலையமைப்பு பங்காளர்களின் அனுபவங்களினூடாக, இலங்கையின் அடுத்த தலைமுறையினருக்கு எவ்வாறு சிறந்த வகையில் கற்பிப்பது என்பது தொடர்பான புரிந்துணர்வைப் பெறுவதே வாழ்நாள் கல்வியாளர்களாக, எங்களின் நிறுவனசார் குறிக்கோள் ஆகும்.