உங்களால் மேற்கொள்ளக்கூடியது

ஒன்றிணைந்து பணியாற்றுவதனூடாக, எமது கல்விக் கட்டமைப்பில் தடங்கல்களாக அமைந்திருக்கும் அறிகுறிகளை எம்மால் எதிர்கொள்ள முடியும் என்பதுடன், எதிர்கால தலைமுறையினருக்கு பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். நாம் அடைவதற்கு எதிர்பார்க்கும் நேர்த்தியான மாற்றங்களுக்கான திட்டங்களில் உங்களையும் பங்கேற்குமாறு அழைக்கின்றோம்.

 

தரவுகளை திரட்டல் மற்றும் பகுப்பாய்வு செய்தல், எமது முறைகளை செம்மையாக்கல் மற்றும் கல்வி சமத்துவமின்மை இடைவெளிகளை நிவர்த்திக்கும் எமது தன்னேற்புத்திட்டம் நிலைபேறானதாக அமைந்திருக்கச் செய்வதை உறுதி செய்வதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். சமூக-பொருளாதார சமத்துவமின்மைகள், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அதிகளவு பாடசாலை இடைவிலகல் வீதங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிக தேவையுடைய பாடசாலைகளைக் கொண்ட பகுதிகளை தெரிவு செய்தல் என்பதிலும், உயர் தரம் வாய்ந்த சக அங்கத்தவர்களை அணுகும் வாய்ப்பை ஏற்படுத்தல், உள்நாட்டு கல்வி அலுவலகங்களினூடாக ஆதரவைப் பெறல், உபகரண வசதிகள் மற்றும் இணைந்து செயலாற்றக்கூடியவர்களுடனான பங்காண்மைகள் போன்றன தொடர்பிலும் எமது இலங்கைக்கான வளர்ச்சித் திட்டம் அமைந்துள்ளது.

Teach First Sri Lanka ஆனது, எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை முழுவதிலும் உள்ள மேலும் பல பாடசாலைகளுக்கு அதன் மாற்றியமைக்கும் திட்டத்தைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு தெளிவான வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டுள்ளது.

இந்த வளர்ச்சியானது, Teach First Sri Lankaக்கு கல்வி சமத்துவமின்மையில் உள்ள இடைவெளிகளைக் குறைக்கவும், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பின்தங்கிய குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றவும் உதவும்.

ஒரு குழந்தைக்கு
அதிகாரம்



ஒரு பிள்ளைக்கு வலுவூட்டல் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் அல்லது தகவல் தொழில்நுட்பம் போன்ற பிரதான பாடங்களுக்கு 1 வருட காலத்துக்கு ஆசிரியர் ஒருவரை கொண்டிருப்பதற்கு 1 பிள்ளைக்கு உதவுவது.

LKR 30,000

ஒரு
சக
அதிகாரம்



ஒரு பெல்லோக்கு ஆதரவளிப்பதன்மூலம் 180 மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முக்கியமான பாடங்களை கற்பிக்கும் ஆசிரியரை நியமிக்கிறீர்கள்.


LKR 1,650,000

ஒரு பள்ளிக்கு
அதிகாரம்



ஒரு பாடசாலைக்கு வலுவூட்டல் 1 வருட காலப்பகுதிக்கு பிரதான பாடங்களுக்கு தகைமை வாய்ந்த ஆசிரியர்களை 540 மாணவர்கள் கொண்டிருப்பர்.

LKR 5,000,000

எங்கள் மாதிரித் திட்டத்தை ஆதரியுங்கள்

எமது மாதிரித் திட்டத்துககு வலுவூட்டல் 1 வருட காலப்பகுதிக்கு 90 க்கு அதிகமான மாறுபட்ட வகுப்பறைகளின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு 15 புத்தாக்கமான கற்பிப்போரை வழங்குவது.
LKR 25,000,000

ஒவ்வொரு இலங்கைக் குழந்தையும் உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு தகுதியானவர்கள்.

பெல்லோஷிப் நிகழ்ச்சித்திட்டத்தில் இணையுங்கள்

Teach First ஸ்ரீ லங்கா பெல்லோஷிப் நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்து, இலங்கையின் சகல சிறுவர்களுக்கு சமத்துவமான கல்விக்கான எமது தன்னேற்புத்திட்டத்தில் அங்கம் பெறுங்கள். எமது பெறுமதிகள் மற்றும் நோக்கத்தை பகிர்ந்து கொள்ளும் உத்வேகமான நபர்களை நாம் நாடுவதுடன், கல்வியில் மாத்திரமன்றி, ஆக்கத்திறன், சிந்தனை, தொடர்பாடல் மற்றும் கரிசனை போன்ற அவர்களின் பரிபூரண திறன்கள், சிறுவர்களின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

பெல்லோ எனும் வகையில், பாடசாலை பயிலல் சூழல் மற்றும் சமூகத்தை மேம்படுத்துவதில் நீங்களும் முக்கிய பங்கு வகிப்பீர்கள். பரந்த பல்கலைக்கழக பட்டதாரிகள், இளம் நிபுணர்கள், புத்தாக்கமான ஆசிரியர்கள் மற்றும் எமக்கு அவசியமான திறன் கொண்டுள்ள அனைவரையும் நாம் வரவேற்கின்றோம். எம்முடன் இணைந்து கொள்வதனூடாக, வினைத்திறனான STEM ஆசிரியர்களில் நீங்களும் அங்கம் வகிப்பதுடன், ஆயிரக் கணக்கான மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவாக்கம் செய்வதுடன், புத்தாக்கமான கல்வி முறைகளை வெளிப்படுத்தும் குழுவின் அங்கம் பெறுவீர்கள். எமது அணியில் இணைந்து கொள்வதனூடாக, இலங்கையின் சிறுவர்களின் வாழ்க்கையில் நேர்த்தியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பான பயணத்தில் நீங்களும் இணையுங்கள்.

TFSL பங்காளர் அமைப்பாக திகழுங்கள்

கல்வியில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பொது-தனியார் பங்காண்மைக்கான வாய்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறுகிய காலத்தினுள் மாணவர்கள் மத்தியில் நேர்த்தியான குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. TFSL இன் ஆட்சேர்ப்பு, பயிற்சிகள் மற்றும் பின்தங்கிய மாகாண பாடசாலைகளில் அங்கம் பெறுவது போன்ற ஆதரவளிப்பதனூடாக, எம்மால் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இலங்கையில், கல்வியின் தரத்தை மாற்றியமைப்பதில் எம்மை நாம் அர்ப்பணித்துள்ளதுடன், கூட்டாண்மை பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது இந்த முக்கியத்துவமான இலக்கை எய்துவதற்கு மிகவும் முக்கியமானது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எம்முடன் கைகோர்ப்பதனூடாக, நீங்கள் அல்லது உங்களின் நிறுவனத்துக்கு கள மட்டத்தில் கல்வியில் குறிப்பிடத்தக்களவு நேர்த்தியான மாற்றத்தை நிலைபேறான தாக்க வழிமுறையில் ஏற்படுத்துவீர்கள். அத்துடன் சகல மாணவர்களும் பயில்வதற்கு தயாராக இருப்பதையும் உறுதி செய்யலாம். எனவே, இலங்கையின் இளம் மக்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வழிமுறைகளை நீங்கள் தேடிய வண்ணமிருந்தால், கூட்டாண்மை பங்காளராக எம்முடன் கைகோர்க்குமாறு நாம் உங்களை ஊக்குவிக்கின்றோம்.

TFSL உறுப்பினராகுங்கள்

TFSL உறுப்பினராக, கல்வியில் உங்களின் ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ளும் கல்வியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பலதரப்பட்ட சமூகத்துடன் இணைவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். பிரத்தியேக நிகழ்வுகள், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் ஆன்லைன் மன்றங்களுக்கு நீங்கள் அணுகலாம், அங்கு நீங்கள் யோசனைகளைப் பரிமாறிக் கொள்ளலாம், திட்டங்களில் ஒத்துழைக்கலாம் மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்கலாம்.

மாற்றத்தை உருவாக்க விரும்புபவர்கள்  எங்கள் சமூகத்தில் சேருவதன் மூலம், அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கான எங்கள் பகிரப்பட்ட பார்வையை அடைய ஆர்வமுள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களை நீங்கள் ஆதரிப்பீர்கள். உங்கள் வருடாந்திர சந்தா கட்டணத்திற்கு, நீங்கள் TFSL இன் பெருமைமிக்க உறுப்பினராகி, தனிப்பட்ட பள்ளிகள், மாணவர்கள் மற்றும் கூட்டாளிகளின் வெற்றிக்கு பங்களிப்பதற்கான தனித்துவமான வாய்ப்புகளை பெறுவீர்கள் 

TFSL மாற்றத்தை ஏற்படுத்துபவராக திகழுங்கள்

இலங்கையின் இளம் சிறார்களின் வாழ்க்கையில் நேர்த்தியாக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வழிமுறைகளை நீங்களும் தேடுகின்றீர்களா? நாட்டின் கல்வியை மாற்றியமைக்கும் எமது தன்னேற்புத் திட்டத்தில் பங்கேற்க வருமாறு வாழ்க்கையின் சகல பாகங்களையும் சேர்ந்த நபர்களை TFSL அழைக்கின்றது. எமது நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் நன்கொடை ஒன்றை வழங்கி, உங்கள் நேரத்தையும் திறன்களையும் தன்னார்வ அடிப்படையில் பகிர்ந்து அல்லது உங்களின் அறிவை பகிர்ந்து கொள்வதனூடாக எமக்கு நீங்கள் உதவலாம். உங்கள் ஆதரவுடன், எம்மால் திறமைசாலிகளை தொடர்ந்தும் இணைத்துக் கொள்வது, பயிற்சியளிப்பது மற்றும் கிராமிய பாடசாலைகளில் அமர்த்துவது போன்றவற்றை தொடர்ந்து முன்னெடுக்கலாம். இன்றே எம்முடன் கைகோர்த்து, தற்போதைய கல்வி நெருக்கடிக்கு தீர்வில் அங்கம் பெறுங்கள். ஒன்றிணைந்து செயல்பட்டால், நம்மால் இலங்கையின் ஒவ்வொரு மாணவரும் கல்வி பயில தயார்நிலையில் இருத்தல், தலைமைத்துவமேற்றல் மற்றும் இயக்கத்தை உறுதிசெய்ய முடியும்.