கனம் நண்பர்களே,

Teach First ஸ்ரீ லங்கா இணையத்தளத்துக்கு விஜயம் செய்தமைக்கும், சிறுவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பை பகிர்ந்து கொள்கின்றமைக்கும் நன்றி, நாம் அனுபவம் வாய்ந்த கற்பிப்பவர்கள், மாற்றத்தை ஏற்படுத்துவோர், கொள்கை தோற்றுவிப்பாளர், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் சமூக தொழில்முயற்சியாளர்களாக திகழ்வதுடன், பல்வேறு பின்புலன்களைச் சேர்ந்த, பொது இலக்கான, செயற்பாட்டினூடாக மாற்றத்துக்கு வலுவூட்டுவதை நோக்கி செயலாற்றுகின்றோம்.

Teach First ஸ்ரீ லங்காவின் நோக்கத்தை வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கு உங்களின் உதவி எமக்கு தேவையாக அமைந்துள்ளது. இலங்கையின் கல்விக் கட்டமைப்பில் தடங்கலாக அமைந்திருக்கும் அடிப்படைக் காரணியை இனங்கண்டு, உணர்வுபூர்வமான மற்றும் கற்பித்தல் சாதனங்களின்றி ஓரங்கப்பட்டுள்ள சமூகத்தின் பின்தங்கிய சிறுவர்களுக்கு, துரிதமாக மாறிவரும் உலகின் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடியவர்களாக மாற்ற அவசியமானவற்றில் பிரதிபலிக்க அழைக்கின்றோம். சகல சமூக-பொருளாதார பின்புலத்தையும் சேர்ந்த இலங்கையின் ஒவ்வொரு பிள்ளைக்கும், பரிபூரண கல்வியை வழங்குவதுடன், சிந்தனையை தூண்டி, ஆக்கபூர்வத் திறனை மேம்படுத்துவது எமது நோக்காக அமைந்துள்ளது.

நாம் ஒன்றிணைந்து, நீண்ட கால அடிப்படையில் எமது கல்விக் கட்டமைப்பில் தடைகளை ஏற்படுத்தும் விடயங்களை சீர் செய்வதில் கவனம் செலுத்தும் வகையில் செயலாற்றினால் மாற்றம் என்பது சாத்தியமானது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.  இந்தப் பயணத்தில் நாம் ஒன்றிணைந்து செல்கின்றோம் எனும் அடிப்படை நம்பிக்கையுடன் நாம் ஆரம்பிக்கின்றோம். இதற்கு காலம் மற்றும் முயற்சி போன்றன அவசியம் என்பதை நாம் அறிவதுடன், Teach for All வலையமைப்பின் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அடங்கலாக ஏனைய நாடுகளில் இது நடந்துள்ளதை நாம் அவதானித்துள்ளால், இலங்கையிலும் முன்னெடுக்கப்படலாம் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

நாம் சிறுவர்களுக்கு
செவிமடுக்கின்றோம்.

உலகளாவிய ரீதியில் Teach for All வலையமைப்பு எவ்வாறு இயங்குகின்றது என்பதில் செவிமடுத்தல் அடிப்படையானதாக அமைந்துள்ளது. கடந்த இரண்டாண்டு காலப்பகுதியை செவிமடுத்தல், ஆய்வுகளை முன்னெடுத்தல் மற்றும் இலங்கையின் கல்விக்கு தடைகளாக அமைந்திருக்கும் விடயங்களை இனங்காண்பதில் செலவிட்டிருந்ததுடன், எமது பெருமளவான பின்தங்கிய சிறுவர்கள் பின்னடைவதற்கு ஏதுவாக அமைந்துள்ள விடயங்களை கண்டறிவதில் ஈடுபட்டிருந்தோம். மட்டக்களப்பில், கற்பித்தல் முறையில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தினால், சிறுவர்கள் ஆசிரியர்களுக்கும் சாதனங்களுக்கும் பதிலளிப்பதில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதில் குறிப்பாக STEM பாடங்களில் முதற்கட்ட அனுபவத்தை நாம் பெற்றிருந்தோம்.

மிகவும் பின்தங்கிய சமூகங்களிலிருந்து ஆரம்ப நிலையிலிருந்து எமது செயற்திட்டம் ஆரம்பிக்கின்றது. அதனைத் தொடர்ந்து கொள்கை மட்டத்தில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை நோக்கி நகர்கின்றது. இது நீண்ட பயணமாக அமைந்துள்ள போதிலும், ஜாதி, இனம் மற்றும் வகுப்பு போன்றன தொடர்பில் காணப்படும் கசப்பான உண்மைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதனூடாக இலங்கையின் சமூகத்தில் பின்தங்கிய கைவிடப்பட்டுள்ள சமூகம் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியும். உண்மையில் உலகத் தரம் வாய்ந்த, சமத்துவமான, அக்கறை கொண்ட இலங்கையின் கல்விக் கட்டமைப்பினூடாக, ஒவ்வொரு சிறுவருக்கும் அவர்களின் பின்புலம் எதுவாக இருந்தாலும், ஒரே விதமான விருத்திக்கான வாய்ப்பு வழங்கப்படும்.

எமது சமூகத்தின் குரல்கள் என்பது நீண்ட காலமாக கல்விசார் வளங்களை மையப்படுத்தியதாகவும், எமது சிறுவர்களை எதிர்காலத்துக்காக நாம் எவ்வாறு தயார்ப்படுத்துகின்றோம் என்பதை குறிப்பதாகவும் எமது தன்னேற்புத்திட்டம் அமைந்துள்ளது. நாம் தனித்து இயங்கவில்லை. இலங்கையின் சிறுவர்களின் கல்வியில் காணப்படும் சில கட்டமைப்பூர்வமான கோளாறுகள் மற்றும் தடைகள் தொடர்பில் பிராந்தியத்தைச் சேர்ந்த எமது சக அங்கத்தவர்கள் மற்றும் பங்காளர்களால் கவனம் செலுத்தப்பட்ட வண்ணமுள்ளன. Teach First ஸ்ரீ லங்காவில், நாம் அவர்களின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு செவிமடுத்து, பயில்வதுடன், இலங்கை சிறுவர்களின் தேவைகளை இலங்கை வகுப்பறைகளில் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு அவர்களின் சிறந்த செயன்முறைகளை பின்பற்றுவோம்.

சமூகத்தின் மிகவும் பின்தங்கிய சிறுவர்களுக்கு எவ்வாறு கல்வி கற்பிப்பது என்பது தொடர்பில் நீண்ட காலமாக ஏற்படுத்தப்பட வேண்டியுள்ள மாற்றத்தை கொண்டு வருவதற்கு தனியான தீர்வு இல்லை என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இன்றைய மற்றும் நாளைய இளம் சிறார்களின் உணர்வுபூர்வமான மற்றும் அறிவார்ந்த தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் எமது கல்விக் கட்டமைப்பில் தொடர்ச்சியாக மாற்றத்தையும் மேம்படுத்தல்களையும் ஏற்படுத்தும் வகையில் ஒரு சமூகம் செயலாற்றுவதனூடாக மாத்திரமே அதனை உறுதி செய்யக்கூடியதாக இருக்கும். எனவே Teach First ஸ்ரீ லங்காவின் நோக்கம், எமது தேசிய கல்விக் கட்டமைப்புகள் தொடர்பில் திரண்ட விழிப்புநிலையை உருவாக்குவதாகும். இந்த திரண்ட விழிப்புநிலையினூடாக மாத்திரமே, சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்தையும் வழிநடத்தி, இலங்கையின் ஒவ்வொரு சிறுவருக்கும் கல்வி பொருத்தமானதாக அமைந்திருக்கச் செய்யக்கூடியதாக இருக்கும்.

எமது நோக்குடன் இணைந்து, இலங்கையின் அனைத்து சிறுவர்களின் வாழ்க்கையிலும் வகுப்பறையினுள்ளே மற்றும் வெளியே அர்த்தமுள்ள மற்றும் நிலைபேறான தாக்கத்தை ஏற்படுத்துமாறு உங்களை அழைக்கின்றோம். ஒன்றிணைந்து, இந்த கல்வி நெருக்கடிக்கு தீர்வு காண்பது பற்றி எம்மால் கவனம் செலுத்த முடியும் என்பதுடன், ஒவ்வொரு சிறுவருக்கும் தமது முழு ஆற்றலை எய்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதை உறுதி செய்ய முடியும்.

தங்கள் நம்பிக்கைக்குரிய,

Teach First ஸ்ரீ லங்கா

மக்கள் மக்களுக்கு உதவும்போது,
​​மாற்றம் நிகழும்